
டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு இன்று காலை ஒரு கார் வந்தது. அந்த காரில் பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஒரு கையெறி குண்டு, பட்டாக் கத்தி இவற்றுடன், சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அ.ம.மு.க.வின் செயலாளராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட புல்லட் பரிமளம் வந்தார்.
தினகரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, அவரது கொடும்பாவியை எரித்துவிட்டு, அங்கிருப்பவர்களை கையெறி குண்டால் தாக்கிவிட்டு, வெட்டுவதற்கு புல்லட் பரிமளம் திட்டமிட்டிருந்தார்.
அவர் அந்த முயற்சியில் ஈடுபடும்போது, அங்கிருந்த ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் மற்றும் அமுமுக தொண்டர், ஜெயா டிவி புகைப்படக் கலைஞர் ஆகியோர் தடுத்தனர். இந்த தள்ளுமுள்ளுவில் அவரது கார் தாக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி நின்றிருந்த புல்லட் பரிமளம் டிரைவர் கையில் இருந்த ஒரு பட்டாக்கத்தி பிடிபட்டது.
இதில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவர், அமமுக தொண்டர், புகைப்பட கலைஞர் ஆகிய மூன்று பேரும் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புல்லட் பரிமளம், அவரது கார் டிரைவர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.