Skip to main content

நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு... தொண்டரிடம் சீறினாரா சீமான்?

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

நேற்று சீமான் தன் தொண்டரிடம் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகி வைரலானது, அந்த ஆடியோ...


அண்ணே வணக்கம்,
 

என்ன நீ சீட்டு அவருக்குதான் கொடுக்கணும், இவருக்குதான் கொடுக்கணும்னு சட்டம் போடுறியாமே
 

என்ன அண்ணே
 

சீட்டு இந்திராங்குற பொண்ணுக்குதான் கொடுக்கணும்னு சட்டம் போடுறுயாமே நீ
 

இந்திரா அக்காவுக்கு கொடுக்கணும்னு சட்டம்லாம் போடலணே, தொகுதில வேலை பார்க்குறவங்களுக்கு, களத்தில இருக்குறவங்களுக்கு...

 

seeman


 

ஏன் அது எனக்கு தெரியாதா, வேலை பார்க்குறவங்க, களத்துல இருக்குறவங்களையெல்லாம் உனக்கு தெரியும், எனக்கு தெரியாதா
 

நம்ம களத்துல இருக்குறவங்க யாருக்காவது கொடுங்கணுதான் சொல்றோம். 
 

ஏன் எங்களுக்கு தெரியாதா யார நிப்பாட்டணும்னு, நாங்களாம் என்ன முட்டாப்பயலுக என்னடா, நீங்க களத்துல இருக்குறவங்களை கண்டுபிடிச்சு எங்களுக்கு காட்டிருவிங்க.
 

அண்ணே இங்க நடக்குறத சொல்றோம் அவ்வளவுதான்.
 

என்ன நடக்குது, என்ன நடக்குதுனு சொல்லு, எங்களுக்கு தெரியாதது உங்களுக்கு தெரியுதா
 

களத்துல இருக்குறவங்களுக்கு வேலை கொடுத்தா நாங்க கூட இருந்து வேலை பாக்குறோம். களத்துல இருக்குறவங்க யாராக இருந்தாலும் சரி. அது இந்திரா அக்கானு கிடையாது. களத்துல நிக்குறவங்க யார வேணும்னாலும் சொல்லுங்க, அவங்களுக்கு கீழ நாங்க வேலை பார்க்கிறோம். 
 

தம்பி நான் நிறுத்துற ஆளுக்குவேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு. நீ என்ன, களத்துல நிக்குறவங்களுக்கு கொடுங்கணு, நீ என்னடா எனக்கு விதி விதிக்குற.
 

என்ன அண்ணே நீங்களே இப்படி பேசலாமா?
 

நான்தான்டா பேசுவேன், நான்தான் பேசுவேன். என்ன நீங்கனா. நீ சொல்றதுக்குதான் நான் இங்க நிற்கிறேனா.
 

களத்துல வேலை பார்க்குறவங்களுக்கு மதிப்பு கிடையாது, கடைசி வரைக்கும் சுவரொட்டி ஒட்டிட்டே இருக்கணும். 
 

ஒட்ட வேணாம் போடா, போடா நீ, ஒட்டவேணாம்டா போடா, எனக்கு போஸ்டர் ஒட்டிக்கத் தெரியும் போடா.
 

கட்சி நம்ம கட்சிணே வேற யாருணே சொல்றது. 
 

அப்போ வாயை மூடிட்டு இரு. எனக்குத் தெரியும், சொல்றத செய். முடியலைனா வெளிய போயிட்டே இரு.
 

அப்படியெல்லாம் போயிற முடியாதுணே. களத்துல நின்னு நாம வேலை செய்றோம். நாங்க கேள்வி கேட்கத்தான் செய்வோம். நீங்க அதற்கு தகுந்த மாதிரி ஆளப்போடுங்க அவ்வளவுதான். 
 

போட முடியாது என்னடா செய்வ இப்ப. நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்ய முடுஞ்சா செய். இல்லைனா வெளியேறி போய்ட்டே இரு. கேள்வி கேப்பேன், கேள்வி கேப்பேனு நக்கல் பண்ணிட்டு திரியிறியா?
 

அடிப்படை உறுப்பினர், வேலை செய்றவன் கேள்வி கேட்கக்கூடாதா, வேற என்னணே தப்பா கேட்டுட்டேன். 
 

நீ எனக்கு வேட்பாளர் தேர்வு பண்ணித்தர என்னடா
 

வேட்பாளர் தேர்வுலாம் பண்ணித்தரல, தொகுதில நிக்குறவங்க...
 

தம்பி நீ இவ்வளவு எல்லாம் பேசாத தம்பி, இவ்வளவுலாம் பேசாத..


இப்படியாக அந்த ஆடியோ முடிகிறது. இதுகுறித்து வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அதை எதிர்த்தும் பேசி வருகின்றனர். அந்த ஆடியோ உண்மையானதா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். இந்த ஆடியோ குறித்து கட்சி சார்பிலும் மறுப்பு ஏதும் வெளியாகவில்லை. 

 

 


 

சார்ந்த செய்திகள்