Skip to main content

கலைஞர் சிலை திறப்புக்கு மம்தா பானர்ஜியை அழைத்த பின்னணி!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

முன்னாள் முதல்வர் கலைஞர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, அவர் மறைந்த நாளான இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்ன்னு மூணு தேசியக் கட்சிகளையும்  ஒருசேர எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை, ஸ்டாலின் ஏன் கலைஞர் சிலை திறப்புக்கு அழைச்சார்ங்கிற கேள்வி பலர் மத்தியிலும் இருக்கு. 
 

dmk



தேர்தலுக்கு முன்பு, மம்தாவால் முக்கியத்துவம் கொடுத்து அழைக்கப்பட்டு கொல்கத்தாவில் கௌரவிக்கப்பட்டார் ஸ்டாலின். அதற்குப் பதில் மரியாதையாகத்தான் மம்தாவை ஸ்டாலின் இப்ப அழைச்சிருக்கார்ன்னு கட்சியினர் மத்தியிலேயே பேச்சும் இருக்கு. கலைஞரைப் பொறுத்தவரை வடக்கே இந்திரா, ஜெயப்பிரகாஷ் நாராயண், வி.பி.சி., வாஜ்பாய், சோனியா போன்ற பெரும் ஆளுமைகளோடு சேர்ந்துகொண்டு தேசிய அரசியலையும் முன்னெடுத்தார். அதேபோல் இப்ப மாநில உரிமைகள் பேசுற மம்தாவையும், புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமியையும் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ஸ்டாலின் அழைச்சிருக்காருன்னு அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்