நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளார் சீமான்,
நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை. எங்கள் கூட்டணியில் இணைபவர்களை, நாங்கள் இணைத்துக்கொள்வோம். நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். ஜனநாயக நாட்டில் எதிர்மறையாக இருப்பது சர்வாதிகார ஆட்சியாக உள்ளது. இது எதிர்கட்சிகளின் குரல் வளையை நெறிக்கும் செயல் ஆகும்.
உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தினால் அ.தி.மு.க. வெற்றி பெறாது என்ற எண்ணத்தில் தான் தமிழக அரசு தேர்தலை நடத்தவில்லை. அனைத்து நாசகார திட்டங்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்க காரணம் அதனை எதிர்க்க துணிவில்லாத அரசு இருப்பதால் தான். இதன் மூலம் தமிழகத்தை குப்பை தொட்டியாக மாற்ற தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. பொன் மாணிக்கவேல் விசாரணையில், முக்கிய அரசியல் நபர்களின் தலையீடு மற்றும் தொடர்புடையது என கண்டறியப்பட்டதால் அந்த விசாரணையை முடக்கி சி.பி.ஐ. விசாரணையை கோருவது தமிழக அரசிற்கு அவமானம். இவ்வாறு கூறினார்.