Skip to main content

தொண்டர்கள் வயிறு எரிந்தால் நாசமாக போவார்கள்..! - பெண் எம்எல்ஏ ஆவேசம்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

dddd

 

‘கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கேட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயர் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும்,


 
கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரணி துணைச் செயலாளர் சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ, பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகரச் செயலாளர் சவுந்தர், வீரபெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தவைர் ராம்குமார் ஆகியோர் இன்று (12.04.2021) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்திருந்தனர்.

 

dddd

 

இந்தநிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் பண்ருட்டி முன்னாள் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களைப் போன்ற உண்மையான அதிமுக விசுவாசிகளை இழந்துகொண்டே போனால் கட்சியின் நிலை?. தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பிற்குப் பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டுவிட்டோம். 

 

அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலேயே இல்லை. இறை சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலே இல்லாத நிலையில் கட்சிக்கு எதிராகவோ, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்.

 

dddd

 

இந்நிலையில், எங்கள் மீது அபாண்டமான, பொய்யான குற்றசாட்டை சுமத்தி நால்வரை நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்து இருப்பது மிகுந்த மன வேதனை அளித்துள்ளது. கடலூர் அமைச்சர் சம்பத் சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

 

உளவுத்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை அறிக்கையைக் கேட்டுப் பெற்று இருந்தாலே உண்மை தெரியும். உண்மையான விசுவாசிகளின் மனதை புண்படுத்தியுள்ளார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்லும். 

 

இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். உண்மையாகவே கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரசியல் சூன்யகாரர்களான கடலூர் அமைச்சர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோரை நான் வணங்கும் ஈசனும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. விசுவாசமான, உண்மையான, தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்த படுபாதகர்கள் விரைவில் நாசமாக போவார்கள்.” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்