சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. லஞ்சம் கொடுக்கப்பட்டு சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து அதுதொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது. சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் சென்று வந்ததாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.சசிகலா சுடிதார் அணிந்து சிறை வளாகத்தில் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியது.
தற்போது சசிகலா சிறை சென்று இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை 4 ஆண்டுகள் அனுபவிக்கும் முன் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சசிகலா வரும் பிப்ரவரி மாதம் சிறையிலிருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாகவும், பாஜகவினர் சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகளை செய்துவருகின்றனர் என்று அமமுக வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக, சுப்பிரமணியசாமியும், சந்திரலேகாவும் சசிகலா விடுதலை விஷயத்தில் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.