Skip to main content

உளவுத்துறையின் ரகசிய கண்காணிப்பில் அதிமுக அமைச்சர்கள்! 

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

ddd

     

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனையை இந்த மாதம் ஜனவரி 27-ந் தேதி நிறைவு செய்கிறார் சசிகலா!. அன்றைய நாளில் அவர் விடுதலையாகலாம் என சசிகலா உறவினர்களும், அதிமுகவினரும் எதிர்பார்க்கிறார்கள். 

 

சசிகலா விடுதலையானால் அதிமுக அரசியலில் பல அதிரடிகள் நடக்கலாம் என சொல்லப்படும் நிலையில், ‘’அப்படி எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை‘’ என அதிமுகவின் மூத்த தலைவர்கள் சொல்லி வருகின்றனர். 

 

இந்நிலையில், அதிமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் என பலரையும் கண்காணிக்க தமிழக உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து உளவுத்துறையின் ரகசிய கண்காணிப்பில் இருக்கிறார்கள் அதிமுகவினர். மேலும், தினகரன், திவாகரன், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது மாநில உளவுத்துறை.

 

சார்ந்த செய்திகள்