Skip to main content

அரசியல் களத்தில் இறங்கிய ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார்? பாஜகவின் அதிர வைக்கும் திட்டம்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுகவில் நீக்கப்பட்ட பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதை அதிமுக, அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருந்தனர். இதனையடுத்து சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி இணைந்தார். நடிகர் ராதாரவியை தொடர்ந்து நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்தார். வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்குள் பாஜக கட்சியை தமிழகத்தில் வலுப்பெற பல்வேறு நடவடிக்கையை பாஜக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 
 

jeeva jothi



இந்த நிலையில்  தமிழகத்தில் மிகப் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால், ஜீவஜோதி மற்றும் பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய சில நாட்களில் சரவணபவன் ராஜகோபாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். அப்போது தண்டனையை அனுபவிக்காமலேயே சரவணபவன் ராஜகோபால் மறைந்தது தனக்கு ஏமாற்றம் தருவதாக ஜீவஜோதி கூறியிருந்தார். இந்த நிலையில் சரவணபவன் ராஜகோபால் வழக்கு புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார் என்று கூறுகின்றனர். சமீபத்தில் ஜீவஜோதியை சந்தித்த வானதி சீனிவாசன் உங்களை போன்ற தைரியமான பெண்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஜீவஜோதி பாஜகவில் இணைந்ததாக கூறுகின்றனர். 


சமீபத்தில் பாஜகவினர் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களை கட்சியில் சேர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஜீவஜோதி நன்கு பேசக்கூடியவர், எதையும் சமாளிக்கும் தைரியம் இருக்கும் பெண் என்ற காரணத்தினால் பாஜகவில் சேர்த்ததாகஅக்கட்சியினர் கூறிவருகின்றனர். அதேபோல் அரசியலில் சில கட்சிகளில் ஜீவஜோதியின் உறவினர்கள் பெரிய பொறுப்புகளில் இருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.   

 

CAB




 

 

சார்ந்த செய்திகள்