கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியை தி.மு.க தலைமை தக்க வைத்திருக்கிறது. இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளை ஒதுக்கினால் நன்றாக இருக்குமென தி.மு.க தலைமையிடம் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறது.
இதற்கிடையில் திமுகவின் தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக், திமுக உட்பட கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகமென ஒரு பட்டியலை தயார்செய்து தி.மு.க தலைமையிடம் கொடுத்தது. அதில் காங்கிரஸுக்கு 27 தொகுதியில் போட்டியிடலாம் என்றும் அது எந்தெந்த தொகுதிகள் எனவும் தி.மு.க தலைமையிடம் கொடுத்தது.
அந்தப் பட்டியல், மதுரவாயல், ராயாபுரம், நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம், உதகமண்டலம், வேடச்சந்தூர், திருச்சி (கிழக்கு), முசிறி, காட்டுமன்னார்கோவில், நன்னிலம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, முதுகுளத்தூர், வைகுண்டம், நாங்குநேரி, விளவங்கோடு, கிள்ளியூர், அம்பத்தூர், மதுரை, விளாத்திகுளம், வால்பாறை, ராதாபுரம், மைலாப்பூர், பூவிருந்தவல்லி மற்றும் திருமயம் எனத் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வி.ஐ.பி.களும் எம்.எல்.ஏ.களும் மாநில தலைமையிலும் டெல்லியிலும் சீட் கேட்டு முட்டி மோதி வருகின்றனர்.