அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெற்றது. இதன் மூலம் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகரம் ஒன்றியம் பேரூர் கழக நிர்வாகிகளைத் தலைமை அறிவித்து வருகிறது.
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம் பேரூர் ஆகிய நிர்வாகிகளுக்கான தேர்தல் விண்ணப்ப படிவங்களை கடந்த 16ஆம் தேதி முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமையிலான தேர்தல் பொறுப்பாளர்கள் வாங்கி சென்றனர்.
அதனடிப்படையில் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்திருந்த அக்கட்சியின் அமைப்புத் தேர்தலில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற அமைப்பு தேர்தலில் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு உரிய பதவிகளில் போட்டியிட்டனர். போட்டியிட்ட நிர்வாகிகள் வெற்றிபெற்ற பட்டியலை நேற்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதில் பெரும்பாலான பழைய பொறுப்பாளர்களை மீண்டும் அதே பதவிக்கு வந்தும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் வனத் துறை அமைச்சருமான சீனிவாசனின் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ராஜசேகரன் மீண்டும் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து மேற்கு ஒன்றிய செயலாளராக ராஜசேகரனை முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நியமித்ததின் பேரில் ஒன்றிய பகுதிகளில் கட்சியை வலுவாக வளர்த்தும் கட்சிக்காரர்களின் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு நல்ல பெயர் எடுத்து வந்தார். அதன் அடிப்படையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 14 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுக்கொடுத்ததைக் கண்டு முன்னாள் அமைச்சர் வனத்துறை சீனிவாசனும் ராஜசேகரனை பாராட்டினர். அதன் அடிப்படையில்தான் கழக அமைப்புத் தேர்தல் நடைபெற்றதின் மூலம் மீண்டும் ஒன்றியச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆசியோடு மீண்டும் மேற்கு ஒன்றிய செயலாளராக ராஜசேகரன் நியமிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு ஒன்றிய பொறுப்பாளர்களும் கட்சித் தொண்டர்களும் பெருந்திரளாக வந்து ராஜசேகரனுக்கு மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதுபோல் இணைச் செயலாளர் காளியம்மாள், துணைச் செயலாளர் லதா தர்மராஜ், ஒன்றிய பொருளாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி தேவசுகந்தி மற்றும் மனோகரன், சின்ன கோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.