திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக ,வீசிக , கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , கொமதேக , ஐஜேகே மற்றும் சில கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன . இந்த நிலையில் அந்ததந்த கட்சியின் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களையும் , கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார் .
அப்போது திமுக தேர்தல் அறிக்கையில் மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அறிக்கை தயாரிக்கபப்ட்டது என்றும் , காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் திராவிட இயக்கங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப உள்ளது என்றும் ,ஆக இரண்டு தேர்தல் அறிக்கையும் மக்களின் நலன் சார்ந்த அறிக்கையாக உள்ளது என்றும் கூறினார். அதிமுக ,பாஜக , பாமக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் முற்றிலும் முரண்பட்ட தேர்தல் அறிக்கையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். பின்பு முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று பேசி வருகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கையே கிழியப்போகிறது என்றும் கூறினார். திமுக கட்சி என்றுமே தேர்தலுக்காக மக்களை சந்திக்கக்கூடிய கட்சி இல்லை மக்களின் பிரச்சனைக்கும் உரிமைக்கும் மக்களோடு, மக்களாக இருப்பவர்கள் என்றும் கூறினார் .