தஞ்சாவூர் திருவையாறில் 176 ஆவது தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்றது. பல்வேறு இசைக்கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த விழாவை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “வடக்கும் தெற்கும் இணைந்து செயல்பட்டால்தான் இந்த நாடு சுபிட்சமாக இருக்கும் என்பதை அன்றே சொல்லி வைத்துள்ளார்கள். இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் நமக்கு உயிர்தான். மற்ற மொழிகளையும் கற்க வேண்டும், மதிக்க வேண்டும் எனச் சொல்கிறேன் என்றால், இன்னொரு மொழியைக் கற்கும்போதுதான் தமிழ் மொழியில் உள்ள நல்லதை வடமொழிக்காரர்களுக்குச் சொல்ல முடியும். பிறமொழிகளைக் கற்பதால் வாய்ப்புகள் அதிகளவில் கிடைத்திடும்.
கம்பன் வடமொழியைக் கற்காமல் இருந்திருந்தால் கம்பராமாயணம் கிடைத்திருக்குமா? இன்னொரு மொழியைக் கற்க யாரும் தடைபோடக் கூடாது.” எனக் கூறினார்.