Skip to main content

பாமகவின் புதிய தலைவர்? 

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

 

தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் சிலர் பாமக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்களாம்.

 

pmk new leader?



அதில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தது நாடாளுமன்றத் தேர்தலுடன் சரி. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சரி வராது. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப்போட்டியிட வேண்டும். இதனால் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். ராஜ்ய சபா சீட் அதிமுக தராமல் ஏமாற்றிவிட்டால் இதுதான் கூட்டணியைவிட்டு வெளியேற சரியான சமயம் என்றும் கூறியுள்ளார்களாம்.
 

மேலும் சில நிர்வாகிகள், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தது பாமக நிறுவனர் ராமதாஸ்தான். இருந்தாலும் ராமதாஸ் எடுத்த முடிவை எதிர்க்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் அந்த கூட்டணி முடிவுக்கு ஒத்துழைத்தார். அதிமுகவுடன் கூட்டணி என்று ராமதாஸ் முடிவு எடுத்தாலும், கடும் விமர்சனத்திற்கு ஆளானர் அன்புமணிதான். மக்கள் பிரச்சனைகளுக்காக தினந்தோறும் கண்டன அறிக்கைகள், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று செயல்பட்டு வந்த பாமக தற்போது அடங்கிவிட்டதா? என பொதுமக்கள் பேசும் நிலை வந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பாமகவில் ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும். ஒரே குரல்தான் ஒலிக்க வேண்டும். ஆகையால் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக இருக்க வேண்டும் என்றும், பாமக நிறுவனராகவும், வழிகாட்டியாகவும் டாக்டர் ராமதாஸ் இருக்கலாம், தற்போது பாமக தலைவராக உள்ள ஜி.கே.மணிக்கு கௌரவமிக்க பதவியில் அமர்ந்தலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்களாம். பாமகவின் அடுத்த பொதுக்குழுவில் பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 


 

 

சார்ந்த செய்திகள்