துணை முதல்வரான ஒபிஎஸ்க்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த மகன் ரவீந்திரநாத்தை ஒபிஎஸ் அரசியலில் கொண்டு வந்ததின் மூலம் ஜெ. ஆட்சி காலத்தில் ரவீந்திரநாத்துக்கு இளைஞர் இளம் பெண் பாசரையின் தேனிமாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்மூலம் அரசியலில் குதித்து மாவட்ட அளவில் பாசரையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நிலையில் திடீரென ரவியிடம் இருந்த பதவியை ஜெ. பறித்து விட்டதால் அரசியலில் சரிவர ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார் ரவி. அதன் பிறகு தற்பொழுது தர்மயுத்தம் மூலம் இபிஎஸ் அணியில் ஐக்கியமான ஒபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கிடைத்ததின் மூலம் தற்பொழுது மீண்டும் கடந்த ஒரு வாரமாக ரவி அரசியலில் குதித்து ஒபிஎஸ்சுடன் வளம் வருவதுடன் மட்டும்மல்லாமல் தனியாக தொகுதியில் இறங்கி அரசியல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் ஒபிஎஸ் சின் இரண்டாவது மகனான ஜெயபிரதீப்பும் இதுவரை அரசியலில் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்தாலும் கூட அவ்வப்போது பெரியகுளத்தில் நடக்கும் நல்லது கெட்டதற்கு போய் தலையை காட்டி வருவது வழக்கம். ஆனால் தற்பொழுது அண்ணன் ரவிந்திரநாத் திடிரென அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பதை கண்டு தானும் அரசியலில் குதிக்க முன் வந்து இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள கன்டமனூர் அருகே இருக்கும் கருப்பண சாமி கோவில்லுக்கு குதிரையும் கோவில் கட்டிடங்களையும் கட்டி கொடுக்க சொல்லி ஏற்கனவே அப்பகுதி மக்கள் ஒபிஎஸ்சிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விஷயம் ஒபிஎஸ் மூலம் ஜெயபிரதீப்க்கு தெரியவே உடனே கன்டமனூர் சென்று அப்பகுதி மக்களை சந்தித்தார் அப்பொழுது அப்பகுதி மக்களும் பிரதீப்பை ஆர்வத்துடன் வரவேற்றனர். அதன் பிறகு அப்பகுதி மக்களோடு கருப்பன சாமி கோவிலுக்கு போய் அவர்கள் சொன்ன கோரிக்கையான குதிரையும் கோவில் கட்டிடபனிகளையும் கூடிய விரல் நிறைவேற்றி கொடுக்கறேன் என உறுதி கூறிவிட்டு சென்றார். அப்பொழுது அப்பகுதியில் இருந்த கட்சிகாரர்களூம் பிரதீப் வந்ததை கேள்வி பட்டு பதறி அடித்து வந்து வரவேற்றனர். இப்படி திடீரென ஒபிஎஸ்சின் இரண்டாவது வாரிசும் அரசியலில் குதித்து இருப்பதை கண்டு எதிர் கட்சிகள் மட்டுமல்ல டிடிவி அணியினரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இனி ஒபிஎஸ்சின் இரண்டு வாரிசுகளும் மாவட்டத்தில் அரசியல் செய்ய போகிறார்கள் என்ற பேச்சு இப்பவே மாவட்டத்தில் எதிரொலித்தும் வருகிறது.
-சக்தி