Skip to main content

ஆட்சி கவிழ காங்கிரஸ் கட்சியே காரணம்! குமாரசாமி பரபரப்பு பேட்டி!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்பு எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்று கொண்டார். இந்நிலையில் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நல்லவர்களுக்கு அரசியல் மிகவும் கடினமான ஒன்று என்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் அரசியலில் தொடர விருப்பமில்லை என்று கூறிய அவர், எனது கட்சித் தொண்டர்களுக்காகவே அரசியலில் நீடிப்பதாக தெரிவித்தார். 
 

politics



பணபலம் மற்றும் சாதி போன்றவைதான் கர்நாடகாவில் ஆட்சி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், நல்லவர்களின் அரசியல் மிகவும் கடினமானது என குறிப்பிட்டார். மேலும் எனக்கு தெரிந்தவரை கர்நாடக அரசியலில் பிளவு ஏற்பட்டபோது கூட மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசு கர்நாடகத்தில் தொடர வேண்டும் என்று தான் காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதனை விரும்பவில்லை. ஆட்சி கவிழவும் அவர்கள் தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறிய இந்த கருத்தால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்கின்றனர். 

சார்ந்த செய்திகள்