இந்தியப் பொருளாதார நிலைமை ஒரு பக்கம்னா, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை சரிபண்ண முதல்வர் எடப்பாடி வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் என்று அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். எடப்பாடி, டூர் புரோகிராமைப் போட ஆரம்பிச்சதில் இருந்தே, அவர் பொறுப்பையும், அவர் வசம் இருந்த இலாகாக்களையும் ஓ.பி.எஸ். உள்ளிட்ட மந்திரிகளிடம் கொடுத்துட்டுப் போகணும்னு அதிமுக கட்சிக்குள் பலமாக எழத் தொடங்கியது. அதேபோல் மத்திய அரசும், ஓ.பி.எஸ்.சிடம் பொறுப்பை கொடுக்கும் படி வலியுறுத்தியதாகி சொல்லப்படுகிறது. ஆனால், எடப்பாடியோ, "இப்போதைய தொழில் நுட்ப காலத்தில் பொறுப்பை ஒப்படைக்கத் "தேவையில்லை, இருந்த இடத்தில் இருந்தே கான்பரன்ஸ் மூலம் நிர்வாகத்தை என்னால் கவனிக்க முடியும்'னு அமைதியா மத்திய அரசிடம் விளக்கம் கொடுத்து, மோடி-அமித்ஷாவையும் சமாதானப்படுத்தியதாக கூறுகின்றனர்.
அதனால் எவரிடமும் தன் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் தன் டீமோட பிளைட்டும் ஏறிட்டார். அவருடைய இந்த சாமர்த்தியத்தைப் பார்த்து அதிர்ந்து போன ஓ.பி.எஸ். ஆதரவாளர்களே, கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை நிலை நிறுத்திக்கிட்ட எடப்பாடியை இனி எதிர்க்க முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டு, அவரை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்கே வந்து இருக்கிறார்கள். ஜெ.-சசி காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட, காலில் விழும் கலாச்சாரத்தை எடப்பாடியிடமும் அ.தி.மு.க.வினர் ஆரம்பித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவரை வழியனுப்ப வந்தவர்களில் மாஜி மந்திரிகளான ரமணா, மூர்த்தி உள்ளிட்ட பலரும், எடப்பாடியின் கையில் பூங்கொத்துகளைக் கொடுத்துட்டு, அவர் கால்களையும் தொட்டு வணங்கி இருக்காங்க. இது ஆளும்கட்சித் தரப்பிலேயே பரபரப்பை உண்டாக்கியிருக்கு. திரும்பி வரும்போதும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அதிமுக கட்சியினர் திட்டம் போட்டுள்ளதாக கூறுகின்றனர்.