உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒருவாரம் கூட இல்லாத நிலையிலும் எல்லாப் பக்கமும் கூட்டணிக் குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். இது பற்றி விசாரித்த போது, கட்சித் தலைமைகள் மேலே கூட்டணிப் பங்கீடுகள் குறித்துப் பேசி முடிவெடுத்தாலும், இரண்டு பெரிய கட்சிகளின் மா.செ.க்கள் லெவலில் தனித்தனியாக லாபி செய்கிறார்கள் என்று தகவல் பரவி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள், பா.ஜ.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் நாங்க சீட் ஒதுக்க முடியாது என்று கூறியதோடு, பா.ம.க.வினரின் தோளில் மட்டும் கைபோட்டுக் கொண்டு சீட்டுகளைப் பகிர்ந்து கொள்வதாக கூறுகின்றனர். இதனால் மற்ற இரு கட்சிகளும் அ.தி.மு.க.வுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
![ops](http://image.nakkheeran.in/cdn/farfuture/eeabOripWKcr2ZO01sPfOJaSl2PGanCrw99S_Qufjg4/1577085185/sites/default/files/inline-images/103.jpeg)
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினர் அனுசரணை காட்டாததால், அங்கும் பா.ஜ.க.வினர் அங்கங்கே தனித்துக் களமிறங்கியுள்ளார்கள். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மந்திரிகளும் மாஜி மந்திரிகளும் எம்.பி.க்களும், லாபி பண்ணி தங்கள் கூட்டணிக் கட்சியினரைப் பதற வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த மாவட்டமான தேனியில், தினகரனின் அ.ம.மு.க.வினர், நான்கைந்து இடங்களில் தேர்தலே வராமல் போட்டியாளர்களை வசப்படுத்திக்கிட்டு அன்னப்போஸ்ட்டாக வெற்றிவாகை சூட முயற்சி செய்து வருவதாக கூறுகின்றனர். இதில் ஓ.பி.எஸ். தரப்பே அப்செட்டாகி இருப்பதாக சொல்கின்றனர்.