தன் சொந்த மாவட்டமான சேலத்தில் நடந்த, சர்வதேச கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக அமைச்சர்கள் புடைசூழச் சென்ற எடப்பாடி, அமைச்சர்களுக்கு அங்கே பலவகை டிஷ்களோட அசைவ விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார். இந்த விருந்துக்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, வருகிற சட்டமன்ற தேர்தலிலும் நான் தான் முதல்வருக்கான வேட்பாளர் என்பதை எல்லோருக்கும் புரிய வையுங்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் தற்போது இருந்தே அதற்கான பணியை செய்யுங்கள் என்று கூறியதாக சொல்கின்றனர். இது ஆரம்ப ட்ரீட் தான் என்று மந்திரிகளுக்கு உற்சாகமாக பேசி விருந்து கொடுத்திருக்கார் எடப்பாடி. சேலத்தில் இருந்து திரும்பிய அதே வேகத்தில் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தை 10-ந் தேதி தொடங்கிவிட்டார். அதற்கு அமைச்சர்கள், மா.செ.க்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டும்தான் முதலில் அழைப்பு சென்றுள்ளது. பிறகு, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர்.
மேலும் இந்த கூட்டத்திற்கான காரணம் பற்றி கேட்ட போது, நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து விரைவில் தேர்தல் நடத்தப்பட இருப்பதால், அது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்தக் கூட்டம் என்று கூறுகின்றனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் கட்சிப் பிரமுகர்களால் அனுபவித்த சிரமங்களை எல்லாம் இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் ஆவலோட இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், மந்திரிகளும் மா.செ.க்களும், மாவட்டப் பிரச்சினைகளையும் குற்றச்சாட்டுகளையும் இந்தக் கூட்டத்தில் யாரும் எழுப்பக் கூடாது என்று அனைவரிடம் கூறியதாக சொல்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் வேட்பாளர் திட்டத்தால் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.