மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சி செய்யும் சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கரோனா விவகாரத்தை வைத்து பாஜக செக் வைத்துள்ளது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு உத்தவ் தாக்கரே அரசு, தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்கப் போகிறது என்றும், ரயில் சேவை தொடங்கப்போகிறது என்றும் திடீரென்று கிளம்பிய வதந்தியால், ஏறத்தாழ 5 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மும்பை ரயில் நிலையத்தில் முண்டியடித்து வந்துவிட்டனர். இதைப்பார்த்து இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது. இந்தச் சம்பவத்தால் மோடியும் டென்ஷனாயிட்டார்.
இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவைத் தொடர்பு கொண்ட அமித்ஷா, உங்களால் ஊரடங்கை அமல்படுத்த முடியவில்லையெனில்? இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம். உங்கள் ஆட்சியைக் கலைக்கவும் தயங்கமாட்டோம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். அதோடு பா.ஜ.க. தரப்பு வைத்த இந்த செக்கால் பதறிப்போன உத்தவ் தாக்கரே, வதந்தி பரப்பியதாக ஊடகத்துறையினர் சிலர் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.