Skip to main content

விரைவில் அழகிரியின் புதிய கட்சி? அதிருப்தியில் ஸ்டாலின்... களத்தில் இறங்கும் உதயநிதி ஸ்டாலின்! 

Published on 01/04/2020 | Edited on 04/04/2020


கரோனா வைரஸ் தாக்கத்தால் யாரும் வெளியே வர முடியாத சூழல் உள்ள நிலையில், கட்சிப் பிரதிநிதிகளோடு மு.க.ஸ்டாலின் பேசுகின்ற வீடியோ கூட வெளியானது. வீட்டிலிருந்தபடியே எம்.எல்.ஏ, எம்.பி, மா.செ.க்கள் எல்லாரையும் தொடர்பு கொண்டு அவரவர் நடவடிக்கைகள் பற்றி விசாரித்துள்ளார். திருப்பூரில் மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் தவிக்கிறார்கள் என்று திரிணாமூல் எம்.பி. ஓ பிரையன் ட்வீட் செய்ய உடனே தி.மு.க சார்பில் அவங்களுக்கு உதவி செய்யப்பட்டது. அதுபோல சென்னையில் பீகார் தொழிலாளர்கள் தவிப்பதை லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி ட்வீட் செய்ய, அவங்களுக்கு தி.மு.க. மா.செ. மா.சுப்ரமணியன் டீம் உதவி செய்தது. இளைஞரணியை உதயநிதி களமிறக்க, தி.மு.க மருத்துவரணி சார்பில் 70 டாக்டர்களை ஆன்லைன் மற்றும் நேரடி உதவிகளுக்கேற்றபடி 10 மண்டலங்களாகப் பிரித்து விட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 
 

dmk

 


அதேபோல் இந்த நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கையையும் ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறார் என்கின்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் கோரியபோது, அது தேவையில்லை என்று சொன்னதோடு பிரதமரையும் முதல்வரையும் பாரட்டிய தி.மு.க.வின் விவசாய அணி மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கத்தைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார் ஸ்டாலின் மதுரையில் ஓய்வாக இருக்கும் மு.க.அழகிரியின் ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம், அங்கிருந்து வந்த உத்தரவுப்படிதான் பேசியிருக்கிறார் என்று அறிவாலயத்துக்குத் தகவல் வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரஜினி, பா.ஜ.க என்று டச்சில் இருக்கும் மு.க.அழகிரி, ஜூன்-3ல் தனிக் கட்சி ஆரம்பிப்பார் என்று அரசியல் ஏரியாவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்