திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அந்தியூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் 100 நாட்கள் வேலைத்திட்டம், 365 நாட்களாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். மேலும் நிலுவைக்கூலி 2 நாட்களில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார். அதற்கடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி 100 நாட்கள் வேலைத்திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்தார். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலும்கூட 100 நாட்கள் வேலைத்திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம். என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத்திட்டத்தை முதன்முதலில் கொண்டுவந்த காங்கிரஸ்கூட 150 நாட்கள்தானே கூட்டியிருக்கிறது, இவர் எடுத்த எடுப்பிலேயே 365 நாட்களாக உயர்த்திவிட்டாரே என அதிர்ச்சியடைந்துள்ளனர்.