Skip to main content

கனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி!

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

இந்தியா முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.இந்த நிலையில் மே 19ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் முடிந்த சில நிமிடங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும்,மாநிலத்தில் திமுக அணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறினார்கள்.ஆனால் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர்ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் அணைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து வந்தார்.

 

kanimozhi



ஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் கனிமொழிக்கு துணை பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் கனிமொழிக்கு  முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி  35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும்  என்று எதிர்பார்க்கப்படுவதால் கனிமொழி, தயாநிதி மாறன்,டி.ஆர்.பாலு,ஆ,ராசா உள்பட சுமார் 7 கேபினட் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.பாஜக ஆட்சி அமைக்க திமுகவின் ஆதரவு தேவைப்பட்டால் திமுக சார்பாக ஒரு சில நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்க முன்வந்தால் திமுகவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் பாஜக தயாராக உள்ளதாக  அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்