நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியோடு சேர்ந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது.இதில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டது.போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படு தோல்வி அடைந்தது.மேலும் மிக குறைந்த சதவிகித வாக்குகள் மட்டுமே இந்த தேர்தலில் தேமுதிக பெற்றது.இதனால் மாநில கட்சி அந்தஸ்த்தை இழக்கும் நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டது.இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.
![dmdk](http://image.nakkheeran.in/cdn/farfuture/X3dqw2DfQMIg8Fn_7_7LJWuav9tYFmJuHobannB1Jaw/1560162826/sites/default/files/inline-images/332_0.jpg)
இதனால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் குறைந்ததாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் ஒரு நாள் மட்டும் பிரச்சாரத்தில் ஒரு சில வரிகள் மட்டுமே பேசிவிட்டு பிரச்சாரத்தை முடித்து கொண்டு கிளம்பினார்.இதனால் மீண்டும் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட மேல் சிகிச்சைக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்புகிறது.இதனையடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல அவர் குடும்பம் தயாரான நிலையில், அவர் உடல் நிலையில் சின்னப் பிரச்சினை ஏற்பட்டதாம். அதனால், அவரது அமெரிக்கப் பயணம் தள்ளி வைக்கப் பட்டிருக்குனு சொல்லப்படுகிறது.