Skip to main content

நாட்டில் நடக்க கூடாத ஒன்று நடக்கிறது...மன்மோகன் சிங் பேச்சு!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எல்.கே.அத்வானி, சுப்பிரமணியன் சுவாமி, குலாம் நபி ஆசாத் மற்றும் பிற எம்.பி.க்கள் ஆகியோர் பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்று பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சில நடக்க கூடாத நிகழ்வுகள் நடந்து வருகின்றது. 
 

congress



பெருகிவரும் சகிப்பின்மை, வகுப்புவாதம், வன்முறையால் நாட்டின் பன்முகதன்மை பாதிக்கப்பட்டு, நாடு பிளவுபடும் சூழலுக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த செயல்பாடுகள் நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள குறிக்கோள்களுக்கும், எண்ணங்களுக்கும் எதிராக உள்ளது. நம் தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை விட வேறு எதுவும் முக்கியமில்லை. இந்தியாவை யாராலும் பிரிக்க முடியாது என்று பேசினார். மேலும் சமீப காலமாக நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது என்பது குறிப்படத்தக்கது. 

சார்ந்த செய்திகள்