Skip to main content

மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு - புதிய கூட்டணி ?

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
stalin 5


தேசிய அளவில் பாஜக அல்லாத புதிய கூட்டணியை அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாஜக அல்லாத புதிய அணி குறித்து பேசினார்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரக் ஓ பிரெய்ன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயுடன், பல்வேறு விஷயங்கள் மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசி வருகிறார். இரு கட்சிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அந்த வகையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன், மம்தா பானர்ஜி இது தொடர்பாக நேற்று சுமார் 12 நிமிடங்கள் பேசினார். அப்போது பாஜகவுக்கு எதிரான புதிய கூட்டணி அமைக்க தங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்