நேற்று புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சார பொதுக்கூட்டம் புதுச்சேரி ஏ.எஃப்.டி. மைதானத்தில் நடைபெற்றது.
அக்கட்சியின் வேட்பாளர் டாக்டர். சுப்ரமணியனுக்கு ஆதரவு கோரப்பட்டது. மேலும் புதுச்சேரிக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,
இவர் சும்மா ட்விட்டரில் பேசுவார், களத்தில் இறங்க சொல்லுங்கள் பார்க்கலாம் எனக்கூறினார்கள். மூன்றே மாதத்தில் களமிறங்கிவிட்டேன். அதெல்லாம் சரி கிராமத்தில் இவர்களைத் தெரியாது, இவர் சும்மா நடிகன், அதெல்லாம் சிட்டிக்குள்ளதான் பலிக்கும் என்று சொன்னார்கள். நேரே கிராமத்திலிருந்து தொடங்கினேன். இப்படி எங்களுக்கு நல்ல, நல்ல யோசனைகளையெல்லாம் கொடுப்பதே எங்கள் விரோதிகள்தான். வாயை வைத்துவிட்டு சும்மா இருந்திருந்தால் எங்களுக்கு இந்த யோசனையே வந்திருக்காது.
அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள், அதற்கு ஆள்காட்டி விரலின் மை போதும், நாங்கள் தனித்து நிற்கிறோம். மற்றவர்களெல்லாம் காட்டில் யானை பயத்திற்காக ஒன்றாக குழுமி போவார்களே சபரிமலைக்கு. அந்தமாதிரி போய்ட்டு இருக்காங்க. சேராத கூட்டமெல்லாம் சேர்ந்துவிட்டது. கூடி கலைவது கூட்டம், இது சங்கமம். எனக்கூறினார்.