Published on 22/12/2020 | Edited on 22/12/2020

அ.தி.மு.க முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும் - மாவட்ட முன்னாள் செயலாளருமான டாக்டர் கணபதி ராஜ்குமார் தி.மு.க.வில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கோவை கார்த்திக், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.