Published on 21/06/2019 | Edited on 21/06/2019
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது
மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி பதில் அளித்தார். அப்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு அமைச்சர் ஸ்மிரிதி ராணி பதில் அளித்தார். அந்த பதிலுக்கு துணை கேள்விகள் கேட்க தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கேள்வி கேட்க முற்பட்டனர்.
அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்து விட்டார். இருந்தும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, இது முக்கியமான கேள்வி இதற்கு அனுமதி தர வேண்டும் என்று கூறினார். இந்த கோரிக்கைக்கு திமுக எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய சபாநாயகர் கேள்விகளை நாடாளுமன்ற குழு அலுவல் தான் தேர்வு செய்கின்றனர்.ஆகையால் உங்கள் ஆலோசனையை நாடாளுமன்ற குழு அலுவலுக்கு தெரியப்படுத்தவும் என்றும் கூறினார்.