Published on 08/03/2018 | Edited on 08/03/2018

இன்று விருதுநகர் கழக மேற்கு மாவட்ட செயலாளரும் சாத்தூர் எம்.எல்.ஏ.வுமான எதிர்கோட்டை சுப்பிரமணியனின் புதல்வர் எஸ்.ஜி.எஸ். பழனிக்குமாருக்கு ராஜபாளையத்தில் திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த டிடிவி தினகரனை வரவேற்க பெரும் கூட்டம் கூடியது.
செய்தியாளர்களை சந்தித்தபோது டிடிவி தினகரன், “காவல்துறையினர் திருச்சியில் நடத்திய செயல் கண்டிக்கத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாக செயல்படுகிறது. மக்களுக்கு காவல்துறை மீது இருந்த மரியாதை குறைந்துவிட்டது. இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஜெயலலிதா இருந்தபோது காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. தலைமையே சரியில்லாததால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது“ என்றார்.