Skip to main content

''சாதனைகளின் அடிப்படையில் மகத்தான வெற்றி பெறுவோம்'' - பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

K.N. Nehru who started the campaign "we will win big based on achievements"

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.

 

பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையிலும் 21 ஆம் தேதி காலை ஈரோடு பெரியார் நகரில் காங்கிரஸ் வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கினார்.

 

பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு முதல்வர் ஒதுக்கியுள்ளார். அக்கட்சியின் வெற்றிக்காக பாடுபட உள்ளோம். சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது; அவர்கள் அரசை விமர்சிப்பது இயற்கையானது. உண்மையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவு வரி உயர்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர். இப்போது, ​​கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளைக் கோருகிறோம். மகத்தான வெற்றி பெறுவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்