Skip to main content

கே.சி. பழனிசாமி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு; இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு மேலும் ஒரு சிக்கல்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

KC Palaniswami removed from AIADMK; High Court new order

 

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பாக பதில் தர ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

அதிமுகவிலிருந்து 2018 ஆம் ஆண்டு நீக்கியது தொடர்பாக முன்னாள் அதிமுக எம்பி கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூன்றாண்டுக்குப் பின் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து கே.சி. பழனிசாமி தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 2020 மார்ச் முதல் அக்டோபர் 2021 வரை வழக்கு தாக்கல் செய்ய முடியாததால் அக்டோபருக்கு பின் மேலும் 90 நாட்கள் அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கி இருந்தது. எனவே மனுவை தள்ளுபடி செய்தது தவறு.

 

அடிப்படைத் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தன்னை கட்சியிலிருந்து நீக்க அதிகாரமில்லை. தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்ப கால விதிகளுக்கு எதிரானது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்” என மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது.

 

இந்நிலையில் இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம் மற்றும் வேட்பாளர் தேர்ந்தெடுத்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மற்றும் இபிஎஸ் தரப்பினரிடையே மோதல்கள் வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்