"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" என்று எம்ஜிஆர் பட பாடலை மேற்கோள்காட்டி சசிகலா தனது பிறந்தநாளை முன்னிட்டு தன் ஆதரவாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..
"சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை தேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன் உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை, உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, பொறுமையோடு இருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே நமக்காகவே காத்துக்கொண்டு இருக்கிறது. அதாவது "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" என்று நம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் பாடியது போன்று, இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துத்தான் இன்றைக்கும் காத்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்." என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.