கரோனாவை வைத்து காங்கிரஸுக்குள் பதவி பிடிக்கும் போட்டிகள் விறுவிறுப்பாக நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி, இந்த கரோனா நேரத்திலும் பெருசாக வெளியில் தலையைக் காட்டவில்லை என்கின்றனர். இதைத் தனக்கு சாதகமாக்கிக்கிட்ட ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், தமிழகம் முழுக்கச் சென்று கரோனா நிவாரண உதவிகளைச் செய்து. தன்னை வெளிச்சப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்கின்றனர்.
மேலும், இதை ப.சி., கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்று, கார்த்தியை தமிழக காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று காய் நகர்த்திக் கொண்டு இருப்பதாகச் சொல்கின்றனர். அதோடு மாஜி தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசரும், கார்த்தி பாணியிலேயே நிவாரணக் களத்தில் இறங்கியிருக்கார். அவரது ஆக்ஷன் ரிப்போர்ட்டை உடனுக்குடன் ராகுலுக்கு அனுப்பும் அவர் தரப்பு, அவரையே மறுபடியும் தமிழக காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.