Skip to main content

என்னுடைய கருத்து மாறுபட்டதாகத் தான் இருக்கும்: கார்த்தி சிதம்பரம்

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

karthi chidambaram



காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இவர் தற்போது காங்கிரஸ் கட்சி எம்பி ஆகவும் உள்ளார் இவர். நேற்று திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கரோனா வைரஸ் காரணமாகவும், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கார்த்தி சிதம்பரம் எம்பி திண்டிவனம் வருகை தந்து நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கொண்டார். அவருடன் ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் உடன் இருந்தார்.
 

அப்போது கார்த்தி சிதம்பரம், மதுக்கடைகளைத் தமிழக அரசு மூடி இருக்கக் கூடாது. நேரம் குறைத்து விற்பனை செய்திருக்க வேண்டும். பூரண மதுவிலக்கு, மதுக்கடைகளை மூடுவது எனது கொள்கை கிடையாது. என்னுடைய கருத்து மாறுபட்டதாகத் தான் இருக்கும். கூடுதல் வரி விதித்து விற்பனை செய்திருந்தால் தமிழக அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கும். ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி கூலிவேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இன்னும் கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும். அயல்நாடுகளில் இப்படிப்பட்டவர்களுக்கு அங்குள்ள அரசாங்கமே நேரில் உதவி செய்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் கோயம்பேட்டில் கூட்டம் அதிகமானதால் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது. இவ்வாறு கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்