மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வாக்குறுதியில் ஏழை, எளிய மக்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் தேர்தல் பரப்புரையின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸ் அறிவித்துள்ள நியாய் திட்டம், வறுமை மீது தொடுக்கப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக். அதாவது துல்லியத் தாக்குதல் போன்றது. இது தேங்கிக் கிடக்கும் இந்திய பொருளாதாரத்தின் என்ஜினை சுறுசுறுப்பாக இயக்கும் பெட்ரோல் போன்றுது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிய பிரதமர் மோடி, அதில் எதையும் நிறைவேற்றவில்லை. பாஜகவின் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடவடிக்கைகளால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டில் வேலையின்மை ஏற்பட்டுள்ளது” என்று பேசினார்.