
பக்தர்கள் தங்களது செல்போன்களை மலையடிவாரத்தில் வைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது . படிப்பாதை, வின்ச் நிலையம், ரோப்க்கர் நிலையங்களில் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். கோயில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலை மீறி மலை மீது செல்போன் எடுத்துச் சென்று புகைப்படம் எடுப்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது .

இந்த நிலையில் பாஜக பிரமுகரும் , நடிகையுமான குஷ்பு, அவரது கணவர் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் குடும்பத்தினருடன் முருகனைத் தரிசனம் செய்ய பழனிக்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழ் கடவுளான ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகனை குஷ்பு குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். இந்த நிலையில், மதன் பின் மழையை சுற்றி வரும்போது சுந்தர். சி தனது கையில் செல்போனையும் மறைமுகமாக எடுத்துச் சென்றுள்ளார். அந்த செல்போனில் மலை மீது பல இடங்களில் நின்று குஷ்பு மற்றும் சுந்தர்.சி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பக்தர்களுக்கு செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் குஷ்பூ மற்றும் அவரது கணவர் சுந்தர்.சி செல்போன் பயன்படுத்தி புகைப்படம் எடுத்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பக்தர்களுக்கு ஒரு நியாயம், பிரபலங்களுக்கு ஒரு நியாயமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.