Published on 21/03/2021 | Edited on 21/03/2021

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து அரசியல் கட்சிகள் களத்தில் தங்களது பரபரப்பை காண்பிக்க துவங்கிவிட்டனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று கோவை மாவட்டம், பீளமேட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர் அவரை சதிலீலாவதி படத்தில் வரும் கோவை பாஷையில் பேசுமாறு கேட்டார். அதற்கு கமல்ஹாசன், “நான் இங்கு நடிக்க வரவில்லை. உங்களுக்கு அதுதான் வேண்டுமென்றால், யூடியுபில் அந்த சினிமா வரும் பாருங்கள். இங்கு எதிர் காலத்தை பற்றி பேச வந்திருக்கிறேன். என்னை இங்கு நடிக்க, பாட, டான்ஸ் ஆட சொல்லாதீங்க. அப்படி பாடனும் ஆடனும்னா டிக்கெட் வாங்குங்க” என்று காட்டமான பாணியில் பேசினார்.