புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள், கல்வியாளர்கள் பலரும் போராடி வந்த நிலையில், நடிகர் சூர்யாவின் எதிர்ப்புக் குரல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. பா.ஜ.க. தரப்பு சூர்யா மேல செம கடுப்புல இருக்குது. தமிழிசை தொடங்கி பா.ஜ.க. பிரபலங்கள் பலரும் சூர்யாவைக் கரிச்சிக் கொட்டியிருக்காங்க. அ.தி.மு.க. அமைச்சர்களும் சூர்யாவுக்கு கல்விக் கொள்கை பத்தி என்ன தெரியும்னு அவரைக் கடுமையா விமர்சித்தது மட்டுமில்லாமல், அரசாங்கத்தின் அனுசரணை இனி தனக்கு வேண்டாம்னு சூர்யா முடிவே பண்ணிட்டாரான்னும் மிரட்டல் தொனியில் எச்சரிக்கையும் செய்தாங்கனு கூறப்பட்டது.
சூர்யா பேசியதற்கு எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் வைகோ, திருமாவளவன், கமல், சீமான்னு பலரும் சூர்யாவை ஆதரிச்ச நிலையில், சூர்யாவுக்காக ரஜினியும் வாய்ஸ் கொடுத்தது பாஜக தரப்பை சற்று கவனிக்க வைத்துள்ளதாக கூறுகின்றனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "காப்பான்'’திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துக்கிட்டார். அந்த விழாவில் பேசிய சிலர், "புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா சொன்ன கருத்தை ரஜினி சொல்லியிருந்தால், அது உடனே பிரதமர் மோடியின் காதுவரை போயிருக்கும்'னு சொன்னாங்க. இதுக்கு பதில் சொன்ன ரஜினி, "புதிய கல்விக் கொள்கை பற்றிய சூர்யாவின் கேள்விகளை வரவேற்கிறேன்'னு வாய்ஸ் கொடுத்ததோடு, "இதுபத்தி சூர்யா பேசியதும் மோடியை எட்டிடிச்சி'ன்னு அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
நேரடி அரசியலுக்கு ரஜினி வரணும்னு பா.ஜ.க. எதிர்பார்த்துக்கிட்டு இருக்கும் நேரத்தில் அவர் இப்படி பேசியிருப்பது கூர்மையா கவனிக்கப்படுது. "காப்பான்' பட விழாவில், வைரமுத்துவின் "தமிழாற்றுப்படை' பற்றி சொன்ன ரஜினி, அதன் வெளியீட்டு விழாவில், தமிழினம் இனி எப்படி செயல்படணும்னு ப.சிதம்பரம் தெரிவிச்ச கருத்தையும் மேற்கோள் காட்டினார். திராவிட இயக்கத் தலைவர்களான ஸ்டாலின், வைகோவும் கலந்துக்கிட்ட வைரமுத்து விழாவில் அவங்க இருவரைத் தவிர்த்துவிட்டு, ப.சிதம்பரம் பேசியதை மட்டும் ரஜினி தொட்டதும் அரசியலாக அந்த விஷயத்தை மாற்றிவிட்டனர் என்று கூறுகின்றனர்.