Published on 13/02/2019 | Edited on 13/02/2019

குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டுவலசில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர்,
வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்ற உத்தரவாதத்தை ராகுல்காந்தி கூறி உள்ளார்.

இந்தியாவின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தியின் மறு உருவமாக அவரது பேத்தி பிரியங்கா காந்தி வந்துள்ளார். அவரது வருகையால் மத்தியில் ஆளும் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது. பிரியங்கா காந்தி நிச்சயம் ஈரோடு வருவார். நீங்கள் வரவேற்க தயாராக வேண்டும். மத்தியில் பிரதமராக ராகுல் வரவேண்டும். மாநிலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். நல்லாட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.