Published on 08/12/2020 | Edited on 08/12/2020
வன்னியர் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை பா.ம.க. நடத்தி முடித்திருக்கும் நிலையில், இரண்டாம் கட்ட போராட்டத்தை நடத்தவும் பா.ம.க. திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க.வில் உள்ள வன்னியர் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கோட்டையிலும் அவரது இல்லத்திலும் சந்தித்து இதுதொடர்பாக விவாதித்து வருகிறார்கள்.
அந்த சந்திப்பில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதாக இருப்பின், அது, நீங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் (எடப்பாடி) முடிவு எடுத்ததாக இருக்க வேண்டும். பா.ம.க.வின் போராட்டத்தால் நடந்ததாக இருக்கக் கூடாது. ஏனெனில், பா.ம.க.வின் போராட்டத்துக்குப் பயந்து இட ஒதுக்கீட்டை அறிவித்தால் அது அவர்களுக்குத்தான் லாபமாக இருக்குமே தவிர அ.தி.மு.க.வுக்கான லாபமாக இருக்காது என்கிற ரீதியில் விவாதித்திருக்கிறார்கள்.