தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரம் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் திங்கள் கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அரசியல் கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். மீதம் உள்ள மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களுக்கு 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான தி.மு.க. தரப்பிலும் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனாலும் அறிவாலயம் இந்த விசயத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து, கூட்டணி கட்சிகளை இழுத்து பிடிப்பதாக கூறுகின்றனர்.
திருச்சி மா.செ.வான கே.என். நேரு அறிவித்த ஊராட்சி வேட்பாளர்களில் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பலரை எம்.எல்.ஏ.வும் இளைஞரணி துணைச் செயலாளருமான அன்பில் மகேஷ் மாற்றிவிட்டு, புது வேட்பாளர்களில் பலரை அறிவித்துள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக நவல்பட்டு ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு நேரு அறிவித்த ஜெயச்சந்திரனை மாற்றிவிட்டு சண்முகம் என்கிறவரை மகேஷ் அறிவிக்க, மா.செ. ஆட்கள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக உண்ணாவிரதத்துக்கு ரெடியானதாக கூறுகின்றனர். ஆனால் நேரு இதைக் கேள்விப்பட்டதும், கட்சியின் வேட்பாளர் படிவத்தை மகேஷ் ஆட்கள் மூலம் அனுப்பி வைத்து, அவர் யாருக்கு கொடுக்க நினைக்கிறாரோ கொடுக்கச் சொல்லுன்னு விரக்தியாக சொன்னதாக தெரிவிக்கின்றனர்.