மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், மிகப்பெரிய போராளியாக திகழ்ந்துக்கொண்டிருக்கின்ற அண்ணன் வைகோ அவர்கள் சொல்லியிருக்கக்கூடிய வார்த்தைகள், பிரதமரை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பது சிலரை திருப்திப்படுத்துவதற்காக. தான் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு சில அரசியல் ரீதியான ஆதாயங்களை தேடுவதற்காக மட்டும் என்றே நான் கருதுகிறேன்.
எதற்காக அவர் சொல்லியிருந்தாலும் கூட, இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களை தருவார்.
அவர்கள் எந்தவிதமான போராட்டங்களை நடத்தினாலும், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவையற்ற முறையில் வார்த்தைகளை கடக்க வேண்டாம் என்று வைகோ அவர்களை கேட்டுக்கொள்கிறேன். யாரை யாவது திருப்திப்படுத்த வேண்டுமென்றால் திருப்திப்படுத்துங்கள். அதுக்காக யாரையாவது அவமானப்படுத்தித்தான் திருப்திப்படுத்த வேண்டுமென்றால் அது தமிழ்நாட்டில் நடக்காது. இவ்வாறு கூறினார்.