![h.raja](http://image.nakkheeran.in/cdn/farfuture/cUEQslZhgK8IzyFvvv4Nuo1kRAjzoUm9L3usf7T6jJo/1540896994/sites/default/files/inline-images/h.raja%20250_0.jpg)
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான விவகாரத்தில், வீடியோவில் இருந்தது என்னுடைய குரல் இல்லை என எங்கும் சொல்லவேவில்லை. குரல் எடிட் செய்யப்பட்டது என்று மட்டுமே சொன்னேன் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவதாக கூறி இந்துகளுக்கு எதிரான யுத்தத்ததை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் சிரியன் சர்ச் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை இதுவரை கேரள அரசு நிறைவேற்றவில்லை.
மசூதிகளில் கூம்பு வடிவ ஆம்ளிபயர் வைக்க கூடாது என்று தீர்ப்பு இருந்தும் அதை அமல் படுத்தவில்லை. பினராயி விஜயன் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வராக கேரளாவில் இருப்பார்.
பாலின சமத்துவம் பேசி ஐயப்பன் கோவிலை கண்காட்சி மையமாக மாற்ற கேரள அரசு முயல்கின்றது. நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது என யாரும் சொல்ல முடியாது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சசிதரூர் தனிப்பட்ட முறையில் நாகரிகமில்லாத நபர். அவர் பிரதமர் மோடியை பற்றி விமர்சனம் செய்து இருப்பதை கண்டிக்கின்றேன்.
சபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா இந்து மதம் மாறியதாக சொல்லப்படுவது தவறான தகவல். அவரை இஸ்லாம் மத்த்தில் இருந்து மத தலைவர்களே நீக்கி அறிக்கைவிட்டுள்ளனர்.
அது போல சபரிமலை வழக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த வழக்கு என்றும் தவறான தகவலை பினராயி விஜயன் சொல்லி வருகின்றார். பா.ஜ.க எப்போதும் இடைதேர்தலுக்கு தயார். பாராளுமன்ற தேர்தலுடன் இடைதேர்தல் நடத்தினால்தான் ஊழலை தடுக்க முடியும். வரும் மார்ச் மாதத்திலேயே பாராளுமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கின்றது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது உயர்நீதிமன்றம் குறித்து போலீசாருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான விவகாரத்தில், அது என்னுடைய குரல் இல்லை என எங்கும் சொல்லவேவில்லை, குரல் எடிட் செய்யப்பட்டது என்று மட்டுமே சொன்னேன். காவல்துறை அதை எடிட் பண்ணியிருக்கலாம், காவல்துறைதான் வீடியோ பதிவு செய்தது.
ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது ராமர் கோவில் விவகாரம் பேசப்படுகிறது என்பது தவறு. நீதித்திறையில் ஏற்படும் காலதாமதம் காரணமாகவே தற்போது தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பேசப்பட்டாலும் அதற்கு இந்துக்கள் காரணமல்ல என தெரிவித்தார்.
.