Skip to main content

'இனியாவது தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும்'- அன்புமணி ராமதாஸ் கருத்து

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

Governor approves online gambling ban bill- Anbumani Ramadoss' opinion

 

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாம் முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்பொழுது மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

முன்னதாக கடந்த வருடம் அக்.19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 131 நாட்களுக்கு பின் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழக அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார்.

 

இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. மறுபுறம் தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளுக்கும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாப்படி 'ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்படும். ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

 

Governor approves online gambling ban bill- Anbumani Ramadoss' opinion

 

தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி இதுகுறித்து, ''ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் தந்தது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது. இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும். ஆளுநரின் முடிவும் மிகத் தாமதமானது என்றாலும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுக்கும் என்ற வகையில் இது வரவேற்கத்தக்கது' என கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்