Skip to main content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வேட்பாளர்களின் சொத்து விபரங்கள்

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

Erode East Constituency; Property details of candidates

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளது. 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். 

 

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து விபரப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.3.50 கோடி. அவரது மனையின் சொத்து 7 கோடியே 16 லட்சமாகவும் உள்ள நிலையில் குடும்ப சொத்தும் ரூ. 7 கோடியே 16 லட்சமாக உள்ளது. ஈவிகேஎஸ். இளங்கோவனின் கடன் மதிப்பு ரூ.1.29 கோடி ரூபாயாக உள்ளது. மனைவியின் கடன் ரூ.1.71 கோடி என்றும் குடும்ப கடன் ரூ.47.55 லட்சமாகவும் உள்ளது.

 

அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் தென்னரசுவின் சொத்து மதிப்பு ரூ.2.27 கோடி ரூபாயாகவும் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.1.78 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடன் இல்லையென்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேமுதிக வேட்பாளரான ஆனந்த்-ன் சொத்து மதிப்பு ரூ.14.74 லட்சமாகவும் வங்கிக் கடன் ரூ.2 லட்சமாகவும் உள்ளது. நாம் தமிழர் வேட்பாளரான மேனகாவின் சொத்து மதிப்பு ரூ.9.7 லட்சமாகவும் அவரின் கணவரது சொத்து ரூ. 2.69 லட்சமாகவும் கடன் மதிப்பு ரூ. 4.8 லட்ச ரூபாயாகவும் கணவரின் கடன் மதிப்பு ரூ. 3.53 லட்ச ரூபாயாகவும் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்