Skip to main content

போலியோவை விரட்டியடிச்சவங்க நம்ம... சென்னையில் மட்டும் 24,000 பேர்? அதிமுக அமைச்சர் அதிரடி பேட்டி! 

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், ந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 694 லிருந்து 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியர்கள் 677 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மொத்தம் 724 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137, மகாராஷ்டிராவில் 130, கர்நாடகாவில் 55 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

admk



மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 43 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் முக கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், பொதுமக்கள் அனைவரும் சமூக விலகியிருத்தலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். போலியோவை விரட்டியடித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. கரோனாவையும் விரட்டியடிக்க வழிகாட்டுதல்களை முறையாக பின்றபற்ற வேண்டும். கரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு 044-25384520 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் சென்னை மாநகராட்சியில் மட்டும் 24,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் ” என்று கூறினார். 

 

சார்ந்த செய்திகள்