Skip to main content

'இபிஎஸ்-ஐ பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது' - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

 'Election of EPS as General Secretary is invalid'-High Court verdict!

 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பல்வேறு வாதங்கள் மற்றும் முறையீடுகளுக்கு பிறகு அவ்வழக்கின் நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

 

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று 11.30 மணிக்கு வெளியிட்ட தீர்ப்பில், 'அதிமுகவில் ஜூன் 23 ஆம் நடந்த பொதுக் குழுவில் இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக் கூட்டம் கூடக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். இபிஎஸ்-ஐ பொதுச்செயலராக தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்த உத்தரவால் அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்