லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி குடும்பம், சினிமா விநியோக பிஸ்னஸில் களமிறங்கியதோடு, ரஜினியின் "தர்பார்' திரைப்படத்தின் தென் மாவட்டங்களுக்கான வினியோக உரிமையை, கார்த்திகேயன், அரவிந்த் என்ற பெயர்களில் வாங்கியிருப்பதாக சொல்கின்றனர். இதற்கான முதலீடுகள், பொ.ப.து. டெண்டர் விவகாரங்களைக் கவனித்துவரும் அவரது பி.ஏ.சேகர் மற்றும் காவல்துறை தொடர்பான நியமனங்களை முடிவு செய்யும் சேலம் ஜிம் அருண் ஆகியோர் மூலம் ஆவின் பார்ட்டிக்கு சென்று, அதுதான் கோலிவுட்டில் முதலீடாகிறது என்று கூறிவருகின்றனர். அதேபோல் எதிர்க்கட்சித் தரப்புக்கும் எடப்பாடியின் நிதி முதலீட்டு உதவி போகிறதாக சொல்லப்படுகிறது. அண்மையில் தேசத் தலைவர் ஒருவரின் பெயரைக் கொண்ட மைய மாவட்டத்துப் பிரமுகர் தரப்புக்கு 50 சி மொத்தமாக கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.