Published on 29/07/2019 | Edited on 29/07/2019
எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளும்கட்சித் தரப்பு எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றி விசாரித்த போது, ஜெ. ஆட்சியில் அமைச்சராக இருந்து, அப்புறம் தினகரன் தரப்புக்குப் போய், அங்கிருந்து தி.மு.க.வில் ஐக்கியமாகி, எம்.எல்.ஏ.வாகவும் ஆகியிருக்கார் செந்தில் பாலாஜி. அவரோட ஆதிக்கம் கட்சியில் மட்டுமல்லாது ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை இல்லத்திலும் அதிகரிச்சிருக்குனு அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இது தி.மு.க.வின் சீனியர்களுக்கே எரிச்சலை ஏற்படுத்திக்கிட்டிருக்கு.
இந்த நிலையில், சட்ட மன்ற வளாகத்தில் தி.மு.க. மாஜி மந்திரி ஒருத்தரை சந்திச்ச போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜியின் முந்தைய குண நலன்களை அவரிடம் விவரித்துவிட்டு, உங்க தலைவரை அவர்கிட்ட எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்னு சொல்லியிருக்கார். அதுக்கு அந்த மாஜி, இப்ப சீனியர்களான நாங்களே எங்க தலைவர்கிட்ட அப்பாயிண்ட் மெண்ட் வாங்கித்தான் பேசவேண்டியிருக்கு. அப்பவும் எதையும் எடுத்துச் சொல்ல நேரம் வாய்ப்பதில்லைன்னு கவலையா சொல்லியிருக்கார். உடனே அமைச்சரோ, சரி, முதல்வர் மூலமா செந்தில் பாலாஜி பற்றிய எச்சரிக்கையை எதிர்க்கட்சித் தலைவரான உங்க தலைவருக்கு அனுப்பறோம்னு சொல்லியிருக்கார். அதாவது, தி.மு.க. உள்விவகாரத்தைப் பற்றி அ.தி. மு.க. கவலைப்படுவதை இரண்டு அரசியல் கட்சியினரும் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருக்கின்றனர்.