மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என்று முன்பே அறிவித்து இருந்தார் . இந்த நிலையில் தமிழ்நாட்டில் அணைத்து தொகுதிக்கும் சென்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் .நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அவரது கட்சியின் வேட்பாளரான ரிபாயுதீன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் . பிரச்சாரத்தின் போது அதிக அளவில் கூட்டம் இல்லாததைப் பார்த்த கமல் பிரச்சாரத்தை சீக்கிரமாக முடித்துக் கொண்டு அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று விட்டார் .
அவர் ஹோட்டலுக்கு செல்வதை அறிந்த கட்சி நிர்வாகிகள் அங்க செல்ல முயன்றனர் .அப்போது கமல் அவர்கள் இங்க யாரும் வரக் கூடாது என்று கடுமையாக எச்சரித்து அனுப்பி விட்டார் . வேட்பாளர் மட்டும் ஹோட்டலில் காத்துக் கொண்டு இருந்தார். பின்பு ஹோட்டலில் இருந்து கமல் வெளியே வந்த போதும் கட்சி தொண்டர்கள் , நிர்வாகிகளைப் பார்த்து பேசவில்லை அவரது பாதுகாவலர்களும் அவர் அருகில் யாரையும் விடாமல் தடுத்து விட்டனர் . இதனால் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் கட்சி தொண்டர்களும் ,நிர்வாகிகளும் அடைந்தனர் . இதை பற்றி தொண்டர்களிடம் விசாரித்த போது கமலை பார்க்கலாம் என்று வந்தோம் ஆனால் எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் இப்படி செய்தது சினிமா ஷூட்டிங் எடுக்க வந்தது போல் இருந்ததது என்று புலம்பிக் கொண்டே சென்றனர் .